சரத்குமார், அசோக் செல்வன் இணையும் ‘போர் தொழில்’
ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ்த் திரையுலகில் நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது.
வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு த்ரில்லர் ஜானரிலான 'போர் தொழில்' எனும் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் இப்படத்தின் தலைப்பை ஏப்ரல் 18 அன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்த...