Shadow

Tag: Exam 2026 web series

EXAM விமர்சனம் | Amazon Prime Video

EXAM விமர்சனம் | Amazon Prime Video

OTT, Web Series, இது புதிது, திரை விமர்சனம்
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் - காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் கடத்தினார் என கதை நீள்கிறது. டி.எஸ்.பி.யாகத் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்ய உதவுவதோடு, ஜான்சியை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தும் ஜெயசந்திரனாக அப்பாஸ் நடித்துள்ளார். அவருக்கும் ஜான்சிக்கும் என்ன உறவு என்ற அத்தியாயம் ரசிக்க வைக்கிறது. மரமல்லியாக அதிதி பாலன் நடித்துள்ளார். அதிகாரச் செருக்கு, கோபம்...