Shadow

Tag: Ezhumin movie vimarsanam

எழுமின் விமர்சனம்

எழுமின் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"எழுமின்! விழிமின்! குறி சாரும்வரை நில்லாது செல்மின்!" என்பது விவேகானந்தரின் வாக்கு. விஸ்வநாதன், அர்ஜுன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி தொடங்கும் பொழுது, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விவேகானந்தரின் இவ்வாக்கை மேற்கோள் காட்டியே உரையாற்றுகிறார். இது மாணவர்களுக்கான படம். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அப்துல் கலாமும், பதாகைகளில் வலம் வருகிறார். மாணவர்களுக்குத் தற்காப்புக் கலை ஏன் அவசியம் என்றும், விளையாட்டுத் துறையில் நிலவும் ஊழல் குறித்தும் படம் பேசுகிறது. அஜய் குங் ஃபூவிலும், கபின் கராத்தேவிலும், வினீத்தும் அர்ஜுனும் பாக்ஸிங்கிலும், சாரா ஜிம்னாஸ்டிக்கிலும், ஆதிரா சிலம்பத்திலும் திறமைசாலிகள். இவர்கள் ஆறு பேரும் நண்பர்கள். இதில் நான்கு பேர் ஏழைக்குடும்பத்தில் இருந்து வருபவர்கள். 'படிக்காமல் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?' என்ற எண்ணமுடைய அவர்களின் பெற்றோர்களைச் சமாதானம் செய்து, மாணவர்கள் விருப்பப்ப...