
ஃபிங்கர்டிப் சீசன் 2 – விரல்நுனி ஆபத்து
ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின் செய்தியாளர் சந்திப்பானது படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.
‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C. வில்லியம்ஸ் தயாரிக்க,சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
ஜீ5 கிளஸ்டரின் ஹெட்டான சிஜு பிரபாகரன், "சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தைப் பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும்...