
“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா
வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்குக் குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள். அவ்விதமாக மூவி பஃப் - ஃபர்ஸ்ட் கிளாப்: சீசன்-2 குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது.
இந்தக் குறும்படப் போட்டியில் கல்கியை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூபாய் 3 லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இவருக்கு அடுத்ததாக, கம்பளிப்பூச்சி இயக்குநர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம் குறும்படத்திற்காகச் சாரங் தியாகு ரூபாய் 1 லட்சம், குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் மயிர் குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூபாய் 25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள்.
2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ...