
ஜென்டில்வுமன் விமர்சனம் | GENTLEWOMAN Review
பூர்ணிக்கும் அரவிந்த்க்கும் கல்யாணமாகி மூன்று மாதமான நிலையில், அரவிந்த்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வர, அரவிந்தைக் கொன்று விடுகிறாள் பூர்ணி. அல்லது இறந்து விட்ட அரவிந்தின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சுகிறாள். அரவிந்துடன் மூன்று வருடமாக உறவில் இருக்கும் ஆன்னா, அரவிந்தைக் காணோம் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறாள். பூர்ணியின் நிலை என்ன, ஆன்னாவின் நிலை என்ன என்பதே படத்தின் கதை.
சந்தர்ப்பச் சூழ்நிலையில் எதிர்பாராத விதமாகக் கொன்றுவிட்டு, அச்சிக்கலில் இருந்து வெளிவர நினைக்கும் கதாபாத்திரம் இல்லை பூர்ணி. கொலை செய்த குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், எல்லா ஆண்களும் அயோக்கியமானவர்களே என்ற கோட்பாட்டினில் தீவிரமான நம்பிக்கை கொண்டவராக உள்ளார். வாய்ப்பு கிடைக்குந்தோறும் மறுபடியும் மறுபடியும் ஆண்களைக் கொலை செய்யத் தயங்க மாட்டார் என அழுத்தமாகப் படத்தை முடித்துள்ளனர். தன்னை விட வயது கு...