Shadow

Tag: Gaami thiraivimarsanam

GAAMI விமர்சனம்

GAAMI விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சமஸ்கிருதத்தில், காமி என்றால் ‘தேடல் உடையவர்’ எனப் பொருள். சிவனின் சாபத்தைப் பெற்றவராகக் கருதப்படும் அகோரி ஆசிரமத்திலுள்ள சங்கர், தேவதாசி துர்காவின் மகளாகப் பிறக்கும் உமா, இவ்திய - சீன எல்லையில் அநாதைகள் மீது நடக்கும் சட்டவிரோதமான மருத்துவ ஆராய்ச்சியில் சிக்கிக் கொள்ளும் CT-333 என அடையாளமிடப்பட்ட ஒருவன் என மூன்று பேரைப் பற்றிய கதை. மனிதர்கள் யாராவது தொட்டால், உடலில் நீலம் பாவி மூர்ச்சையாகிவிடுவார் சங்கர். அத்தகைய சாபத்தைப் பெற்ற சங்கரை, அகோரிகளே தங்கள் கூட்டத்தில் இருந்து வெளியில் அனுப்புகின்றனர். தான் யார் என்பதையும் அறியவும், தன் சாபத்துக்கான விமோசனத்தைத் தேடியும், தன்னை அகோரி ஆசிரமத்தில் விட்ட கேதார் பாபாவைத் தேடி, ஹரித்வாரிலிருந்து பிராயக்ராஜில் (அலஹாபாத்) நடக்கும் கும்பமேளாவிற்குச் செல்கிறான் சங்கர். சிறுமி உமாவையும் தேவதாசியாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூளையின் செயற்திறனை மா...