Shadow

Tag: Gods of Egypt

காட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்

காட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மனிதர்களும், கடவுள்களும் ஒன்றாய் வாழ்ந்த காலமது. கடவுளே மன்னனாக இருந்து மக்களை ஆட்சி செய்கிறார்கள். ஒசிரிஸ் எனும் எகிப்தின் மன்னன், காற்றுக் கடவுளான தன் மகன் ஹோரஸுக்கு முடிசூட்ட, விழா ஏற்பாடு செய்கிறார். அங்கே வரும் ஹோரஸின் சிற்றப்பாவான பாலைவனங்களுக்குப் பொறுப்பேற்கும் இருள் கடவுள் செத், தன் அண்ணனான ஒசிரஸைக் கொல்வதோடு ஹோரஸின் இரண்டு கண்களையும் பிடுங்கிக் கொள்கிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தில் தோன்றும் கடவுள்களின் சராசரி உயரம் 9 அடி. ஆவேசமாகிச் சண்டையிடும் தருணங்களில் 12 அடிக்கு விஸ்வரூபமெடுப்பார்கள். கடவுள்கள் தான் எனினும் அவர்களுக்கும் மரணம் உண்டு. இருள் கடவுள் செத் எதிர்பார்ப்பதோ மரணமின்மையையோடு தீர்க்க ஆயுசாக நைல் நதி பாயும் எகிப்தை ஆள்வது. அவரது தந்தையான சூரிய கடவுள் “ரா”-வோ, தனக்குப் பிறகு பூமியை விழுங்க நினைக்கும் அபோஃபிஸ் எனும் ராட்சஷ ஜந்துவுடன் தினமும் ...
எகிப்தின் கடவுள்கள்.!

எகிப்தின் கடவுள்கள்.!

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
சலிக்கச் சலிக்க கிரேக்கக் கடவுள்களின் சண்டைகளை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது எகிப்தியக் கடவுள்களின் சண்டையை ஜோரான விஷூவல் எஃப்ட்ஸுடன் காணத் தயாராகுங்கள். ஹாலிவுட்டின் லயன்ஸ்கேட்டுடன் இணைந்து வியகாம் 18 (Viacom 18) மோஷன் பிக்சர்ஸ், ‘காட்ஸ் ஆஃப் எகிப்த் (Gods of Egypt)’ படம், இம்மாதம் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவில் வெளியிடவுள்ளது. 300 படத்தில் ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோநிடாஸாக நடித்த ஜெரார்ட் பட்லர், இருள் கடவுள் ‘செத்’தாக நடிக்கிறார். அவருக்கு எதிராகப் போர் புரியும் காற்றுக் கடவுள் ஹோரஸாக நிக்கோலாய் கோஸ்டர் வால்டாவ் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பெரிய பெரிய விநோத மிருகங்களும், இடையில் சிக்கித் தவிக்கும் மனித இனத்தை அச்சுறுத்த வருகின்றன....