G2 | பான்-இந்திய ஸ்பை த்ரில்லர் திரைப்படம்
“கூடாச்சாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில், G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் தரத்திற்குச் சான்றாய் அமைந்துள்ளது. G2 படம் மிகச் சிறந்த ஸ்பை த்ரில்லராக உருவாகி வருகிறது எனும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
இப்படம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. G2 அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும், பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை வினய் குமார் சிரிகினிடி இயக்குவதோடு, முன்னணி நாயகன் அடிவி சேஷுடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கத...