Shadow

Tag: Hara Tamil cinema Review

ஹரா விமர்சனம்

ஹரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்லூரிக்குப் படிக்கப் போன இடத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகும் தன் மகளின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க பயணப்படும் ஒரு தந்தையின் பயணமே இந்த “ஹரா” திரைப்படம். “மைக் மோகன்” என்றும் “வெள்ளிவிழா நாயகன்” என்றும் புகழப்படும் நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடித்திருக்கிறார். இளமை காலங்களிலேயே அவர் ஆக்‌ஷன் எல்லாம் அவ்வளவாக செய்த்தே இல்லை. வயோதிகத்தில் அழைத்து வந்து வலுக்கட்டாயமாக ஆக்‌ஷன் காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள். அவரது உடலும் வயதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. கதை நாயகனாகவும், காதல் நாயகனாகவும் அறியப்பட்டவரை கமர்ஸியல் நாயகனாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கை கொடுக்கவில்லை. அப்பாவிற்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்துமே அயர்ச்சியைக் கொடுக்கின்றன. துடுப்பற்ற ஓடம் போல் தி...