Shadow

Tag: Harish Cinemas

நறுவீ விமர்சனம் | Naruvee review

நறுவீ விமர்சனம் | Naruvee review

சினிமா, திரை விமர்சனம்
மலைவாழ் குழந்தையர்க்குக் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது நறுவீ திரைப்படம். நறுவீ என்றால் நறுமணம் எனப் பொருள்படுமாம். கல்வியின் அவசியம் குறித்த படமென்பது படத்தின் ஒருவரிக் கதையாக இருந்தாலும், அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் திரைக்கதையில் மாற்றம் செய்துள்ளனர். குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் இணைகிறார். பெரும் காஃபி பவுடர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர்களது வருகைக்குப் பின்னுள்ள காரணம் வணிகம் மட்டுமே. ஆனால் குன்னூர் மலையை அவர்கள் தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை. இதனூடாக, நேரடியாக அல்லாமல் சுற்றி...
நறுவீ – மலைவாழ் குழந்தையரின் கல்வி

நறுவீ – மலைவாழ் குழந்தையரின் கல்வி

சினிமா, திரைத் துளி
ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களைப் பற்றிப் பேசும் ஹாரர் த்ரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “நறுவீ” ஆகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலைவாழ் மக்களின் குழந்தையருக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார் A. அழகு பாண்டியன். அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன், ரொமான்ஸ் காமெடி, கலந்து பரபரப்பான ஹாரர் த்ரில்லர் படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுபாரக் M. மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வ...