32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நறுவீ விமர்சனம் | Naruvee review

Dinesh R சேலம் Published: 26/08/2025 2 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 சினிமா
எழுத்து அளவு:

மலைவாழ் குழந்தையர்க்குக் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது நறுவீ திரைப்படம். நறுவீ என்றால் நறுமணம் எனப் பொருள்படுமாம். கல்வியின் அவசியம் குறித்த படமென்பது படத்தின் ஒருவரிக் கதையாக இருந்தாலும், அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் திரைக்கதையில் மாற்றம் செய்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் இணைகிறார். பெரும் காஃபி பவுடர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர்களது வருகைக்குப் பின்னுள்ள காரணம் வணிகம் மட்டுமே. ஆனால் குன்னூர் மலையை அவர்கள் தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை. இதனூடாக, நேரடியாக அல்லாமல் சுற்றி வளைத்தே படம் அதன் மைய நோக்கத்தைத் தொடுகிறது.

பன் பட்டர் ஜாம் படத்தில் நகைச்சுவையில் கலக்கியிருந்த VJ பப்பு கொடுத்த வேலையைக் குறை வைக்காமல் படத்தின் கலகலப்பிற்காக நடித்துள்ளார். மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் அலாக்கை, மலைவாழ் குழந்தையரின் கல்விக்கு உதவும் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். VJ பப்புவிற்கு ஜோடியாக நடித்துள்ள பாடினி குமாரும் தொழிற்முறை மருத்துவர் என்பது குறிப்பித்தக்கது. அமானுஷ்யங்களைத் தொடர்ந்து, அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பவராக நாயகி வின்ஷு ரேச்சல் நடித்துள்ளார். படிப்பிற்கான வேட்கையும், படிப்பால் ஏற்படும் மாற்றத்தில் நாட்டம் கொண்டவராக மாதவி எனும் பாத்திரத்தில் ஒரு சிறுமி நன்றாக நடித்துள்ளார்.

குன்னூரின் நிலப்பரப்பைத் தன் கேமராவிற்குள் அழகாகச் சிறைபிடித்துப் பார்வையாளர்களுக்கு விஷுவல் விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன். குன்னூர் மலைவாழ் மக்களின் அறியாமை மூலம் கல்வியின் அவசியத்தை உணர்த்த முயற்சி செய்துள்ள இயக்குநர் சுபாரக் முபாரக், அதை நேரடியாகும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாம். மலையைப் பின்னிக் கொண்டு ஏறும் கரடுமரடான பாதையைப் போல் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை, மைய நோக்கத்தைத் தவறவிட்டாலும் ஹாரர் த்ரில்லர் ஜானருக்கு ஒரு மாதிரி உதவியுள்ளது.

– வெண்பா தமிழ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.