“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்
பார்க்கிங் படத்தைப் போல் ஒரு அசத்தலான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக அ. வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், தேவதர்ஷினி, பாலசரவணன், டி எஸ்கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ளது.
படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்காக பேசிக்கொண்டிருந்...