ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்
நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி.
43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான ஜாக் க்வான்ட்டா என்பதில் நிச்சயமற்று இருக்கிறார் ப்ரிட்ஜெட்.
மூன்று படங்களுமே ப்ரிட்ஜெட்க்கு ஏற்படும் உறவுச் சிக்கல்கள் பற்றியதே! 1995இல் எழுத்தாளர் ஹெலன் ஃபீல்டிங் எழுதிய நாவலான “ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் டைரி”யை அடிப்படையாகக் கொண்டு, 2001 இல் முதல் பாகம் வந்தது. 1999இல் எழுதப்பட்ட 'ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்: எட்ஜ் ஆஃப் ரீ...