Shadow

Tag: Hrithik Roshan

பலம் விமர்சனம்

பலம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் 'திறமையுள்ள' அல்லது 'சாதித்து முடிக்கக் கூடிய' எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், 'பலம்' என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. உறுத்தாத டப்பிங் மிகப் பெரிய ஆறுதல். சில இடங்களில் கைதட்டலும் பெறுகிறது. ரோஹன் தன் மனைவி சுப்ரியாவிடம் ரஜினி குரலில் பேசும் காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். படத்தின் நாயகனான ரோஹனும் டப்பிங் ஆர்டிஸ்ட் தான்; அதுதான் அவன் பலமும். ஒட்டுமொத்த படமும் ஒரு மென்கவிதை போல...
பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன்

பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான காபில் எனும் ஹிந்திப் படம் தமிழில், “பலம்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படு வெளிவரவுள்ளது.. 31 வயதான பிண்ணனிக் குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவைத் தனது இல்லத்திலும் கழிக்கிறான். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவைச் சந்திக்க நேர, அவள் மீது காதல் வயப்படுகிறான். ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளைக் கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன் சுப்ரியாவைப் பிரிய நேரிடுகிறது. சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள...