Shadow

Tag: Illumination Entertainment

மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘இல்லுமினேஷ்ன் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில், 2016 இல் வெளிவந்த, தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் எனும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. செல்லப் பிராணிகள், தன்னை வளர்க்கும் குடும்பத்தினரோடு எப்படி உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்கின்றன என்பதுதான் இந்தப் பாகத்தின் பிரதான கரு. முதற்பாகத்தை இயக்கிய க்றிஸ் ரெனாட் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். வளர்ப்பவருடன் புது பண்ணை வீட்டிற்குச் செல்லும் மேக்ஸும், அவன் நண்பர்களும், தங்கள் பயத்தைக் கடந்து எப்படி ஹீரோவாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. படத்திற்கு அலிக்சான்ட்ரூ டெஸ்ப்லா இசையமைத்துள்ளார். உலகமெங்கும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட, இப்படத்தைத் தமிழகத்தில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது....
சிங் விமர்சனம்

சிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பிக்சார் அனிமேஷன் படங்களில், கதை சொல்லும் முறையில் ஒரு மேஜிக் இருக்கும். பொம்மையோ, காரோ, ரோபோவோ, எலியோ, மீனோ என இப்படி எதுவாக இருந்தாலும், அதை உயிருள்ள கதாபாத்திரங்களாக நம்மை உணரச் செய்து விடுவார்கள். இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட், தனதுமினியன்ஸ் எனும் கதாபாத்திர உருவாக்கத்தால், வயது வித்தியாசமின்றி அத்தனை ரசிகர்களையும் தன் பால்கவர்ந்தவர்கள். அவர்கள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹிட்டான மினியன்ஸ் படத்திலேயே கூட, பிக்சார் ஏற்படுத்தும் மேஜிக் இல்லாமல் இருந்தது. ஆனால், "சிங் (SING) படத்தில் மாயம் செய்துள்ளனர் இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட். பஸ்டர் மூன் எனும் கோலா கரடிக்கு, தன் தியேட்டரில் பிரம்மாண்டமான இசைப் போட்டி நடத்த ஆசை. கையிருப்போ தொள்ளாயத்து சில்லறை மட்டுமே இருக்கிறது. தனது அசிஸ்டென்ட்டான பச்சை ஓனானிடம் 1000 டாலர்கள் பரிசுத் தொகை என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், மூதாட்டியான பச்சை ஓனானின...
சிங் – கோலாகலமான இசைப் போட்டி

சிங் – கோலாகலமான இசைப் போட்டி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
மைக் என்கிற எலி, மீனாஎன்கிற யானை, ரோசிட்டா என்கிற பன்றி, ஜானி என்கிற கொரில்லா, ஆஷ் என்கிற முள்ளம்பன்றி ஆகிய ஐவரும் பங்கேற்க உள்ள இசைப் போட்டி அது. சிங் எனும் இந்த அனிமேஷன் இசைப்படத்திற்காக சுமார் 85 பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக “தி ஃபெயித் (The faith)” என்ற பாடல், கோல்டன் க்ளோப் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அடிநாதத்தோடு சம்பந்தமுள்ள பாடல் அது. கையிருப்பிலுள்ள 1000 டாலர்களைக் கொண்டு 100,000 டாலர் பரிசுத் தொகை என தவறுதலாக வந்துவிடும் அறிக்கையைச் சமாளிக்க முயல்வார் தியேட்டர் ஓனரான கோலா கரடி பஸ்டர் மூன். மீனா யானைக்கு மேடை என்றால் பயம், கொரில்லா ஜானியின் தந்தைக்கு ஜானி பெரிய டானாக (Don) வேண்டுமென ஆசை. என அனைவரும் ஒருவித நம்பிக்கையில் மேடையேறுகின்றனர். சிங், எமோஷ்னல் படமும் கூட! டெஸ்பிக்கபிள் மீ, டெஸ்பிக்கபிள் மீ – 2, மினியன...