மைக் என்கிற எலி, மீனாஎன்கிற யானை, ரோசிட்டா என்கிற பன்றி, ஜானி என்கிற கொரில்லா, ஆஷ் என்கிற முள்ளம்பன்றி ஆகிய ஐவரும் பங்கேற்க உள்ள இசைப் போட்டி அது.
சிங் எனும் இந்த அனிமேஷன் இசைப்படத்திற்காக சுமார் 85 பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக “தி ஃபெயித் (The faith)” என்ற பாடல், கோல்டன் க்ளோப் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அடிநாதத்தோடு சம்பந்தமுள்ள பாடல் அது. கையிருப்பிலுள்ள 1000 டாலர்களைக் கொண்டு 100,000 டாலர் பரிசுத் தொகை என தவறுதலாக வந்துவிடும் அறிக்கையைச் சமாளிக்க முயல்வார் தியேட்டர் ஓனரான கோலா கரடி பஸ்டர் மூன். மீனா யானைக்கு மேடை என்றால் பயம், கொரில்லா ஜானியின் தந்தைக்கு ஜானி பெரிய டானாக (Don) வேண்டுமென ஆசை. என அனைவரும் ஒருவித நம்பிக்கையில் மேடையேறுகின்றனர். சிங், எமோஷ்னல் படமும் கூட!
டெஸ்பிக்கபிள் மீ, டெஸ்பிக்கபிள் மீ – 2, மினியன்ஸ், தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் போன்ற அனிமேஷன் படங்களை வெளியிட்ட யுனிவர்சல் பிக்சர்ஸ் இப்படத்தையும் வெளியிடுகிறது. அனிமேஷன் வரலாற்றில் அதிக வசூலைக் குவித்து இரண்டாம் இடத்திலுள்ள மினியன்ஸ் படத்தைத் தயாரித்த இல்லுமினேஷ்ன் என்டர்டெயின்மென்ட் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது.
டிசம்பர் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.