இந்தியாவின் திணறலான 50வது வெற்றி
இந்த உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத இந்திய அணியும், இதுவரை வெற்றியை ருசிக்காத ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில், முதல் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தாலும், பின்னர் வீறுகொண்டு எழுந்து, தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று, இறுதியாட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான். 2018 ஆசிய கப்பிலும் பங்களாதேஷ், இலங்கையுடன் வெற்றி, இந்தியாவுடன் 'டை' என நம்பிக்கையை அளித்தது. ஆனால் இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இலங்கைக்கு எதிரான போட்டியைத் தவிர, ஏனைய போட்டிகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாகவே இருந்தது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம், அவர்களின் சுழற்பந்து வீச்சு. ஆனால் இந்த உலகக்கோப்பையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்...