Shadow

Tag: Indrajit thirai vimarsanam

இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஒருவருக்குத் துணையாக வேலைக்குச் சேர்கிறான் துறுதுறு இந்திரஜித். மருத்துவக் குணம் கொண்ட விண்கல் ஒன்றைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் குழு, சவால்களையுக் எதிரிகளையும் சமாளித்துச் சாதித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியவில்லை. ரோலர் கோஸ்டர் பயணம் போலவும், அவசரமானதொரு சாகசப் பயணம் போலவும் படம் முடிகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவில் கேரளக் காடுகளும், கோவா காடுகளும் கண்களுக்கு மிகக் குளிர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசுமையையும், இயற்கையின் செழுமையையும் தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல். சோனாரிகா என்றொரு கதாநாயகி மின்னல் போல் மின்னி மறைகிறார். பாடலுக்காக மட்டும் வந்து போகிறார். யானை மீது அறிமுகமாகும் அஷ்ரிதா ஷெட்டி தான் படத்தின் நாயகி. அவரும் பாடலுக்காகத்தான் என்றாலும் மின்னி மறையாமல் படம் நெடுகேவும் வருகிறார். ...