Shadow

Tag: Jadaa movie

ஜடா விமர்சனம்

ஜடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
    வடச்சென்னையில் செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளைப் பின்பற்றாத கால் பந்தாட்டத்தில் கலந்து கொள்ள கதிர் ஆசைப்படுகிறார். அந்த ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும், அதனால் நிகழ்ந்த சில பயங்கரங்களையும் கோச் எடுத்துரைக்கிறார். அதை மறுத்துரைத்து, 'செவன்ஸ் ஆடுவேன்' என்பதில் உறுதியாக நிற்கிறார். அதற்கான காரணமும், முடிவில் செவன்ஸில் கதிர் அணி எப்படி வெற்றி கொண்டது என்பது தான் ஜடா. ஒரு படத்திற்குச் சிறந்த துவக்கம் மிக முக்கியம். அதை ஜடா இயக்குநர் குமரன் மிகச் சிறந்த முறையில் கையாண்டுள்ளார். நடிகர்களை வேலை வாங்கியதிலும் ஒரு தேர்ந்த இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓவியர் ஸ்ரீதர் நடிப்பும், அவரது கதாபாத்திர வார்ப்பும் அத்தனை துல்லியம். கதிர் நடிப்பில் எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் பரியேறும் பெருமாள் பரியன் எட்டிப் பார்க்கிறார். மற்ற இடங்களில் ...