Shadow

Tag: Jai Bajrangbali

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஆன்‌மிகம், சினிமா
உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மேண்டலின் U.ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (ஃபிப்ரவரி 28) நினைவாக அவரது சிஷ்யனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனைப் போற்றும் அனுமன் சாலிசா பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார். இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U.ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U.ராஜேஷ் ஆகியோரும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளனர். இந்தப் பாடலை, ஃபிப்ரவரி 28 அன்று மாலை, சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபற்ற 'தி கிரேட் மேண்டலின் ஷோ (T...