32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

Dinesh R சேலம் Published: 01/03/2019 2 நிமிட வாசிப்பு Updated: 08/04/2019 ஆன்‌மிகம்
எழுத்து அளவு:

HANUMAN-CHALISA-DSP

உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மேண்டலின் U.ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (ஃபிப்ரவரி 28) நினைவாக அவரது சிஷ்யனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனைப் போற்றும் அனுமன் சாலிசா பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U.ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U.ராஜேஷ் ஆகியோரும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளனர்.

இந்தப் பாடலை, ஃபிப்ரவரி 28 அன்று மாலை, சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபற்ற ‘தி கிரேட் மேண்டலின் ஷோ (The Great Mandolin Show)’ என்ற நிகழ்ச்சியிலும், மார்ச் 2 மாலை சிங்கப்பூரில் எஸ்பிளண்ட் அரங்கில் (Esplanede Auditorium) நடைபெற உள்ள ‘The Mandolin & Beyond’ என்ற நிகழ்ச்சியிலும் பிரத்தியேகமாக நடத்த உள்ளனர். மேலும் இப்பாடல் விரைவில் இணையத்திலும் வெளியாக உள்ளது.

முதலாம் ஆண்டு நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கி இருந்த ‘குருவே நமஹ’ என்ற பாடல் இன்று வரை பிரபல பாடலாகவும் அவரவர் தங்களது குருவிற்காக சமர்ப்பிக்கும் பாடலாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.