
ஜெய் பீம் ‘பவர்’ பாடல்
சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடலான ‘பவர்’ வெளியாகியுள்ளது. அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், நீதிமன்ற வழக்காடலை களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பவர் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலை...