Shadow

Tag: Jamaa thirai vimarsanam

ஜமா விமர்சனம்

ஜமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கூத்துக்கலை என்பது மனிதர்கள் சில பல ஒப்பனை உபகரணங்களுடன் நடத்தும் நிகழ்த்துக்கலை. மஹாபாரதக் கூத்து, வள்ளித்திருமண கூத்து, அரிச்சந்திர கூத்து என நமது புராண இதிகாசங்களை ஒட்டி இக்கலைகள் நடத்தப்படுவதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்படியான கூத்துக்களுக்கு மவுசு அதிகம். தற்போதைய சூழலில் கூத்துக்கலை வழக்கொழிந்து வந்தாலும், இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூத்துக்கலை பெரும் சிரமத்துடன் இயங்கி தான் வருகிறது. ஜமா படம் அப்படியான கூத்துக்கலையில் ஊடோடியுள்ள அக்கலைஞர்களின் வாழ்வையும், அதில் ஒருவனின் லட்சியத்தையும் காதலையும் பேசுகிறது. நாயகன் பாரி இளவழகன் சேத்தன் நடத்தும் கூத்து ஜமாவில் குந்தி அல்லது திரளெபதி வேடமிட்டு ஆடும் கலைஞன். அவருக்கு ஒரு தீரா ஆசை உள்ளது. அது என்னவென்றால் ஒருநாளாவது அர்ஜுனன் வேசம் போடவேண்டும் என்பதே. ஆனால் அதற்கு ஜமாவின் தலை ஆன சேத்தன் ஒத்துழைக்க மறுக்கிறார். பாரி இளவழகனின் அ...