JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் படம்
நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM” படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் டிராமா, பன்மொழி இந்தியப் பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் காண்பிக்கும். இது, அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்!
JGM திரைப்படத்தை சார்மி கெளர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத். இந்த ஆக்ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், மற்றுமொரு அட்டகாசம...