ஜீவி – 2 விமர்சனம்
தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி ஆகியவற்றை மையக்கருவாகக் கொண்ட படம் 'ஜீவி'. அப்படத்தின் இரண்டாம் ஆஹாவில் நேரடியாக வெளியாகியுள்ளது.
முந்தைய பாகத்தில், தொடர்பியலைத் தெரிந்து கொள்வாரே அன்றி மையப்புள்ளியை அடையமாட்டார் நாயகன். ஆனால், முதற்பாகத்தின் வெற்றிக்குக் காரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குக் கிடைக்கும் நீதி தரும் ஆத்ம திருப்தியே!
இந்தப் பாகத்தில், குடும்பச்சூழல் காரணமாக நாயகன் மீண்டும் திருடுகிறான் சரவணன். அதையொட்டி, தொடர்பியலின் காரணமாக, சரவணனைச் சுற்றி நடப்பவை அனைத்தும் தவறாகிறது. மையப்புள்ளியைக் கண்டடைந்தால் தான், இதை நிறுத்த முடியுமென உணருகிறான் சரவணன். மையபுள்ளியை எப்படி சரவணன் கண்டடைந்தான் என்பதே படத்தின் கதை.
போலீஸ் அதிகாரி ஆதில் மொஹமத்தாக, நாசரின் தம்பி ஜவஹர் நடித்துள்ளார். மலையாள நடிகர் அனில் முரளிக்கு மாற்றாக இவர் நல்ல தேர்வாக அமைந்துள்ளார். நாயகன் வெற்றிக்கும், கருணா...