ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்
ஜப்பானில் கடத்தப்படும் பேபி ஹம்சியைத் தமிழக இளைஞனான ஜம்புலிங்கம் எப்படி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் கதை.
கதை ஜப்பானில் நிகழ்வதால், ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் புகழைப் படத்தில் காட்டியுள்ளனர். அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம். சிட்டி 'தி ரோபாட்'டாக லொள்ளு சபா ஜீவா வருகிறார். சகுனம் எனும் பாத்திரத்தில் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். டான் டேவிட் சகுனத்தைத் தன்னுடன் கை விளங்கால் பிணைத்துக் கொண்டு குளியலறை, படுக்கையறை என இழுத்துக் கொண்டு போகிறார். கலை ஆர்வலர் டான் டேவிடாக ஒகிடா எனும் ஜப்பானியர் நடித்துள்ளார்.
ஐரீன் எனும் பாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். ஜம்புவால் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கும் பாரம்பரிய பாத்திரத்தில் வருகிறார். பரதநாட்டியக் கலைஞராகவும், ஹம்சிகாவின் அம்மாவாகவும் நடித்துள்ளார் சுகன்யா.
ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத் ...