Shadow

Tag: Kaalangalil Aval Vasanatham review in Tamil

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாரம் படத்திற்குத் திரைக்கதை எழுதிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள முதற்படம். ஆனால் சீரியசான படமாக இல்லாமல், ரொமெடி (ரொமாண்டிக் காமெடி) வகையைச் சேர்ந்த படமாகக் காலங்களில் அவள் வசந்தம் படத்தை இயக்கியுள்ளார் ராகவ். ராதேவிற்கு, ஷ்யாமின் மீது முதல் பார்வையிலேயே காதல் எழுகிறது. சினிமாவில் காணும் ரொமான்ஸைத் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென உன்னத லட்சியம் உடைய ஷ்யாம், ராதேவைக் கல்யாணம் செய்து கொள்கிறான். எல்லாப் பெண்ணுகளிடமும் ஒரே ரொமான்ஸ் பேட்டர்னை முயற்சி செய்யும் ஷ்யாமின் ரொமான்ஸ் பொய்யானது எனச் சுட்டிக் காட்டுகிறாள் ராதே. அவர்களுக்கு இடையேயான ஊடல் பிரியும் அளவு பெரிதாக, முடிவில் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. அறிமுக நாயகனான கெளஷிக் ராம், ஷ்யாம் கதாபாத்திரத்திற்கு மிக அழகாகப் பொருந்தியுள்ளார். படத்தில் சிரித்த முகத்துடனேயே வரும் ராதே பாத்திரத்தை ஏற்றிருக்கும் அஞ்சலி நாயரு...