Shadow

Tag: Kadamaiyai Sei thirai vimarsanam

கடமையை செய் விமர்சனம்

கடமையை செய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'முத்தின கத்திரிக்கா' படத்தை இயக்கிய வெங்கட் ராகவனின் அடுத்த படைப்பு. இவர் இயக்குநர் சுந்தர். சி-யிடன் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். சிவில் இன்ஜினியரான எஸ்.ஜே.சூர்யா, தேவ் பில்டர்ஸ் கட்டிய அடுக்குமாடி கட்டடமொன்று இடிந்து விழும் தருவாயில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரைப் பேசவிடாமல் செய்ய, வேன் இடித்து அவரைக் கொல்லப் பார்க்கின்றனர். அவ்விபத்தால், அவர் ஸ்டூப்பர் (Stupor) நிலைக்குச் சென்றுவிடுகிறார். அதாவது, மூளை விழிப்பு நிலையில் இருந்தாலும், உடல் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். அவர், தன்னைச் சுற்றி நடப்பனவற்றை அனைத்தையும் கவனிப்பார், பேச நினைப்பார் ஆனால் அவரால் முடியாது. இந்தக் குறைபாடுகளை மீறி எப்படி எஸ்.ஜே.சூர்யா, அந்தக் குடியிருப்பில் வாழ்பவர்களை எப்படிக் காப்பாற்றுகின்றார் என்பதுதான் படத்தின் கதை. மிக சீரியசான கதையில், சேஷு, மொட்டை ராஜேந்திரன் போன்றோர்களைக் கொண்டு நகைச்சுவைக்கும் ...