Shadow

Tag: Kadaram Kondan review

கடாரம் கொண்டான் விமர்சனம்

கடாரம் கொண்டான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர் கடாரம் ஆகும். அந்த மாநிலத்தில், பரவலாக ஒரு கலவரத்தினை உருவாக்கும் அளவு செல்வாக்கு கொண்டவன் நாயகன் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். 2010 இல் வெளிவந்த 'ஆ பூ போர்தான்த் (À bout portant)' என்ற ஃப்ரென்ச் படத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் தூங்கா வனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் ம செல்வா. 'ஆ பூ போர்தான்த்' என்றால் "மிக அருகில்" எனப் பொருள். இதே ஃப்ரெஞ்சு படத்தைத் தழுவி, நெட்ஃப்ளிக்ஸால் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்திற்கு 'பாயின்ட் பிளான்க்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என அதற்குப் பொருள். தமிழிலோ, நாயகன் துதி பாடும் தலைப்பாய் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறைக்குச் சென்று, வெளியில் வந்து அமைதியாக வாழும் கே.கே.வை ஒரு கொலைவழக்கில் சிக்க வைத்துக் கொல்லப் பார்க்கிறான் வின்சென்ட். கே.கே...