Shadow

Tag: Kalam novel

களம் நாவல் விமர்சனம்

களம் நாவல் விமர்சனம்

புத்தகம்
களம். அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக இராஜேஷ் ஜெயப்பிரகாசம் அவர்கள் எழுதிய நாவல் இது. கிரிக்கெட்டையும் சினிமாவையும் மையமாக வைத்து எழுதப்பட்ட க்ரைம் த்ரில்லர். இந்த நாவல் குறித்தான பல்வேறு விளம்பரக் குறிப்புகளிலும் அவ்வாறுதான் சொல்லப்பட்டிருந்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழில் வெகுசில நாவல்களே வெளிவந்துள்ளன. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய 'லேடீஸ் ஹாஸ்டல்', பட்டுக்கோட்டை பிரபாகரின் இரு க்ரைம் நாவல்கள், வெ.த.புகழேந்தியின் 'வீணையடி நீ எனக்கு' போன்றவை சில முக்கியமான நாவல்கள். இது தவிர சில குடும்ப நாவல்கள் கூட இதில் அடக்கம். ஆனால் எனக்குத் தெரிந்து இவை வெறுமனே ஹீரோ ஒரு கிரிக்கெட் வீரராகக் காட்டுவதோடு நின்று விடுகின்றன. க்ரிக்கெட் அதன் முக்கியப் பிண்ணனியாக இருப்பதில்லை. ராஜேஷின் களம் நாவல் முழுக்க முழுக்க கிரிக்கெட் பிண்ணனியில் எழுதப்பட்டிருக்கிறது. 'சரி இதெல்லாம் ஒரு பெருமையா ...