களத்தூர் கிராமம் விமர்சனம்
திடீரென்று ஒரு படம் நல்லதொரு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு படம் தான் ‘களத்தூர் கிராமம்’.
பழி வாங்கும் கதை என மூன்றே வார்த்தையில் படத்தின் கதையைச் சுருக்கி விடலாம். ஆனால், எந்தச் சமயத்தில் யார் யாரைப் பழி வாங்குகிறார்கள் என்பதும், கதைக்களமும் காலமும் தான் படம் ஏற்படுத்தும் ஆச்சரியத்திற்குக் காரணம். ஒரு மகன் தனது தந்தையைக் கொல்ல நினைக்கின்றான்; தந்தையின் மரணத்தித்திற்காக ஓர் ஊரையே காவு வாங்க நினைக்கின்றான் அதிகாரத்தில் இருக்கும் ஒரு மகன்; தனது திருமணம் நின்றதற்குக் காரணமாக இருந்ததால் நண்பனைப் பழி வாங்குகிறான் சபலன் ஒருவன்; தனக்கொரு பிரச்சனை என வந்த பொழுது உதவாதவனை நேரம் பார்த்துச் சிக்கலில் மாட்டி விடுகிறான் பூசாரி; மகன் சாவிற்குக் காரணமான ஒருவனை அவனது மகனைக் கொண்டே கொல்லத் துடிக்கும் ஒரு முதிய தம்பதி; தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க நினைக்கும் பண்ணையார் மகன் எனப் படத்தில் அத...