கல்கி 2898 AD விமர்சனம்
கடவுளின் அவதாரக் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இரண்டு கதைகள் உண்டு. ஒன்று வசுதேவர் தேவகிக்கு பிறந்த கிருஷ்ணரின் கதை. மற்றொன்று யோசேப்பு – மரியாவிற்கு பிறந்த இயேசுவின் கதை. இந்த இரண்டிலுமே பொதுவான அம்சங்கள் என்று பார்த்தால் குழந்தையை கொல்லத் துடிக்கும் மன்னர்கள், குழந்தையை காப்பாற்ற போராடும் தாய் தந்தையரின் போராட்டம், வானில் தெரியும் அடையாளங்கள் என பல உண்டு. இந்த பொதுவான அம்சங்களின் பின்னணியில் இந்து சமயத்தின் பிரதான நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கும் கலியுகத்தின் கல்கி அவதாரத்திற்கு கற்பனையாக ஒரு உரு கொடுத்தால் அது தான் “கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை.
படம் குருஷேத்திரப் போரில் அபிமன்யு மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையை அழித்த அசுவத்தாமனுக்கு கிருஷ்ணர் சாகா வரமென்னும் சாபமளித்து, கல்கியாக தான் கருவில் தோன்றும் போது என்னைக் காப்பதின் மூலம் உனக்கு சாப விமோசனமும் கிடைக்கும் என்று...