கனா காணும் காலங்கள் – சீசன் 3 ஆகஸ்ட் 30 முதல்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற 'நியூ ஏஜ் நியூ பேட்ச்' எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது.கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். அரவிந்த் அன்னெஸ்ட், ஷிபி சீனிவாசன், விக்ரம் பிட்டி, ஆர்த்தி அஷ்வின், கவிதா மற்றும் ஸ்ரீ ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் குரல் கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவு - AJ திப்பு
நடன இயக்கம் - அப்சர்
இசை - ஃபுளூட் நவின்
'கனா காணும் காலங்கள்' முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்க...