Shadow

Tag: Kanchana movie review

காஞ்சனா – 3 விமர்சனம்

காஞ்சனா – 3 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல், டாப்ஸி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள்; இப்போழுது காஞ்சனா-3 இல், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என மூன்று கதாநாயகிகள். உலகக் கோப்பை கிரிக்கெட் போல, 4 வருஷத்துக்கு ஒரு தடவை முனி சீரிஸ் வருகிறது. 2023 இல் வரப் போகும், காஞ்சனா-4 இல் கண்டிப்பாக நான்கு கதாநாயகிகளை எதிர்பார்க்கலாம். அந்த நான்கு கதாநாயகிகள் இடுப்பிலும், நாயகனான ராகவா லாரன்ஸ் ஜம்ப் பண்ணி உட்காரப் போகிறார். நகைச்சுவையாமாம்!! இந்தப் படத்தில், ஒரு இயக்குநராக பல புது முயற்சிகளைச் செய்துள்ளார் லாரன்ஸ். அதில் முக்கியமானது, பேய்ப் படமான காஞ்சனா franchise-ஐ அப்படியே நகர்த்தி சாமிப்படமாகவும், பக்திப்படமாகவும் முன்னெடுத்துள்ளார். காஞ்சனா படத்தில், நரசிம்மரிடம் பேரம் பேசுவார் சரத்குமார். இந்தப் படத்தில் அகோரிகள், காளிதேவியையே வர வைத்து பேய்க்கு அனுக்கிரகம் செய்கிறார்கள். ப...