கர்ணன் விமர்சனம்
"என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?" என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப் படத்தைப் பார்க்கச் சுற்றம் சூழத் திரையரங்கிற்குச் செல்பவர்கள் பாக்கியசாலிகள்.
ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவுப்படுத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவா? இல்லை. எதேச்சதிகாரம், காலனிய ஆட்சியின் அடக்குமுறை, சுதந்திரத் தாகம், சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களின் எழுச்சி, அவர்களின் வீரம் என சுதந்திர தினம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை.
முன்னோர் பெருமையைப் பழங்கதையாகப் புறக்கணிக்காமல், வாட்ஸ்-அப்பில் ஃபார்வேர்ட் செய்து மகிழ்ச்சியடையும் ஒரு சமூகத்திற்கு, முன்னோர்கள் அனுஷ்டித்த சமூக அநீதியைப் பற்றித் தெரிந்த...