கர்ணனின் கவசம்
இந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப் பிறகு என்னவாயிற்று என்பதுதான் நாவலின் கரு.
மிக அட்டகாசமாக ஜெர்மனியிலிருந்து நாவல் தொடங்குகிறது. கவசம் ஏன் ஜெர்மனியர்களுக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்துடன் சூடு பிடிக்கிறது நாவல். ஆனால் இந்த ஆரம்பச் சூடு அதன்பின் அடியோடு போய், பக்கத்திற்குப் பக்கம் பிரமிப்பெனப் பயணிக்கிறது நாவல்.
நாவலின் போக்கு பிடிபட கொஞ்சமாவது ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களும், மகாபாரத கதாபாத்திரங்களும் தெரிந்திருந்தால் நல்லது. அப்படியில்லைனாலும் பாதகமில்லை. ‘நான் இன்னார். இன்னாரின்மீது இன்னக் காரணத்திற்காக 1000 வருடங்களாகக் கோபமாக இருக்கேன்’ என வாக்குமூலம் கொடுத்துக் கொண்டே உள்ளார்கள்.
ஜெர்மனியருக்கு ஏன் கவசம் தேவைப்படுகிறது எனத் தெளிவாகத் தெரிகிறது. துரியோதனனுக்கும் சகுனிக்கும் ஏன் கர்ணனின் கவசம் தேவைப்படுகிறதெனத் தெரியவில்லை. வஞ்சகமாக தானம் கோரிப் பெறவந்த...