Shadow

Tag: Kasmeera

PT சார் விமர்சனம்

PT சார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை ஒரு உடற்கல்வி ஆசிரியர் எதிர்த்து நீதி வாங்கித் தந்தால் அதுதான் இந்த “PT சார்” திரைப்படம்.ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தி கல்வித் தந்தை என்று போற்றப்பட்டு வருபவர் தாளாளர் குரு புருஷோத்தமன் (தியாகராஜன்). இவரது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கனகவேல் (ஹிப் ஹாப் ஆதி) எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியையான வானதி (காஷ்மீரா) மீது காதல் கொள்வது எந்த வம்பு தும்புக்குள்ளும் வராது என்பதால் ஒட்டு மொத்தப் பள்ளிக்கும் தெரியும்படி தைரியமாக காதலித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிப்பவரும் தன் பள்ளிக்கு அருகே அதே நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படிப்பவருமான நந்தினி (அனிகா சுரேந்திரன்) பள்ளியுடன் தொடர்புடைய ஒரு பாலியல் அத்துமீறல்...