கத்தி சண்டை விமர்சனம்
கொஞ்சமே கொஞ்சம் கூட யதார்த்தம் வந்து விடக் கூடாதென மிகவும் கவனமுடன் படத்தை எடுத்துள்ளனர்.
நாயகன் யாரென்பது சஸ்பென்ஸ். முக்கால் வாசி படத்திற்குப் பின் தான் ஓப்பன் செய்கிறார்கள். அந்த சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும்தான். நாயகன் யாரென விசாரிக்காமல் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு உதவி செய்கிறார் சூரி; தமன்னாவோ காதலிக்கவே செய்கிறார். 'எல்லா லவ்விலும் ஒரு பொய் இருக்கும்; உன் பொய்ல லவ்விருக்கு' என காரணமும் கண்டுபிடிக்கிறார்.
டெபுடி கமிஷ்னராக வருகிறார் ஜெகபதி பாபு. மிக சீரியசான முகத்தோடு படத்தில் காமெடி செய்கிறார். நாயகன் யார், என்ன செய்கிறான் என விசாரிக்கிறேன் என்று சொல்லி பெரிய ரவுடிகளை வைத்துக் கடத்தி அடிக்கிறார். 'பணம் தருகிறோம். ஓடிடு' என போலீஸ் மிரட்டுகிறது. அதற்கு மசியாத நாயகனை நல்லவனென அங்கீகரித்து, மாப்பிள்ளையாக ஏற்கிறார் ஜெகபதி பாபு. விஷால் யார், ...