காட்டேரி விமர்சனம்
திருவிழாவில் கலந்து கொள்ளும் கிராமத்தினர் அனைவரையும் யாரோ ஒருவர் மின்கம்பத்தை அறுத்துக் கொள்வதில் படம் தொடங்குகிறது.
நிகழ்காலத்தில், காமினி எனும் இளம்பெண்ணைப் பணத்திற்காகக் கிரணின் குழு கடத்த, அவள் புதையல் இருக்கும் கிராமத்தைப் பற்றிச் சொல்ல, காமினியுடன் அந்தக் குழு அந்தக் கிராமத்திற்குப் புறப்படுகின்றனர். அந்த பேய்க் கிராமத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் குழுவிற்கு நடக்கும் வினோதமான நிகழ்வுகளே படத்தின் கதை.
புதையலைத் தேடி ஏழு பேர் குழு புறப்படுகிறது. கிரணாக வைபவ், வைபவின் மனைவி ஸ்வேதாவாக சோனம் பஜ்வா, காமினியாக ஆத்மிகா, கலி உருண்டையாக ரவி மரியா, கஜாவாக கருணாகரன், சங்கராக குட்டி கோபி, மற்றும் இவர்களுடன் ஒரு போலீஸ் அதிகாரி. அந்தக் கிராமம் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது.
அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற பேயாகத் திரியும் மாத்தம்மா நினைத்தால்தான் முடியுமெனத் தெரிய வருகிறது. குழு, மாத்தம்ம...