Shadow

Tag: Kavan movie

கலக்கப் போகும் கவண்

கலக்கப் போகும் கவண்

சினிமா, திரைத் துளி
சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் "கவண்". இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், விக்ராந்த், 'அயன்' ஆகாஷ், போஸ் வெங்கட், 'நண்டு' ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'கனா கண்டேன்' முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் இரட்டை எழுத...