Shadow

Tag: KCL team Thiruvananthapuram

கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

சமூகம்
முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்குத் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தைத் தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கெனத் தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாகச் செயல்பட்டு வருவது போல், கேரளத்துத் திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL போட்டிகள் நடக்கவுள்ளன. 6 அணிகள...