கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்
காலங்காலமாய் முடிவே இல்லாமல் நிகழும் விவாதத்திற்கு விடை கண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஆத்திகர்களும் நாத்திகர்களும் தங்களுக்குள் சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் ராஜேஷ், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மிகச் சுலபமாய் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறார். த்ரிஷா அல்லது நயன்தாரா, இருவரில் ஒருவரோடு குமாருக்கு திருமணம் நிச்சயமாகி விட்டால் கடவுள் உள்ளார் எனப் பொருள். இத்தகைய உயரிய தத்துவ விசாரணையை உடையதுதான் படத்தின் கதை.
த்ரிஷா, நயன்தாரா என்ற பெயர்களைச் சம்பந்தப்பட்ட நடிகைகளோடு பொருத்தி நேரடி பொருள் கொள்ளக் கூடாது. அது ஓர் அழகான குறியீடு. எந்தப் பொழப்பும் இல்லாத விர்ஜின் பையனுக்கு, காதலிக்க எந்தப் பெண் கிடைத்தாலும் தேவதைதான். தேவதையை நேரில் பார்த்திராத யதார்த்தவாதியான நாயகன், நடிகைகளின் பெயரைக் கொண்டு தான் பார்க்கும் பெண்ணை ஒப்பீடு செய்து கொள்கிறான். அப்படி குமாரு...