Shadow

Tag: Kingston thirai vimarsanam in Tamil

கிங்ஸ்டன் விமர்சனம் | Kingston review

கிங்ஸ்டன் விமர்சனம் | Kingston review

சினிமா, திரை விமர்சனம்
ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் 25 ஆவது படம். இப்படத்தை அவரே தனது சொந்த நிறுவனமான பேரரல் யுனிசெர்ஸ் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார். தூவத்தூர் எனும் கடலோரக் கிராமத்தில், 1982 ஆம் ஆண்டு முதல் கடலில் இறங்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தங்கப்பசி கொண்ட ஒருவனது பிணத்தைக் கடலில் வீசி விடுவதால், சபிக்கப்பட்டதாக மாறும் அக்கடல், கடலுக்குச் செல்பவர்களை எல்லாம் பலி வாங்குகிறது. ஊரின் வாழ்வாதாரத்திற்காக, கிங்ஸ்டன் கடலில் இறங்கி மீன் பிடித்து ஊராரின், அக்கிராமத்தின் ஆதித் தொழிலை மீட்டெடுக்க முயற்சி செய்கிறான். கடலில் இறங்கும் கிங்ஸ்டன் எதிர்கொள்ளும் அமானுஷ்யமான சம்பவங்கள் தான் படத்தின் இரண்டாம் பாதிக்கதை. இடைவேளையில்தான் தூவத்தூர் கடலில் இறங்குகிறார் கிங்ஸ்டன். அதுவரை அந்த அமானுஷய்த்திற்காகப் பார்வையாளர்களைத் தயார்ப்படுத்துகின்றனர். அதுவும் நேரடியாகக் கதைச் சொல்லாமல், 1982, 2009, 2025 என திரை...