KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது.
பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கும், மரணத்திற்குமான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சராசரியாக நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்நோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் மூளை தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்பட்டு, அதன் பின்விளைவுகளால் 10 கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு 1 கோடியே 22 லட்சம் பேர் புதிதாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 14 கோடியே 30 லட்சம் பேர் பக்கவாதத்தின...