
கூரன் – நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய்
நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்?
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 'கூரன்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று போராடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதி மன்றம் படி ஏறிப் போராடுகிறது.மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை இத்திரைப்படம் பேசுகிறது.
இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா ரோபோ ஷங்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன...


