
சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019
இவான் கோஃப் மற்றும் பென் ராபர்ட்ஸ் இணைந்து 1976-இல் உருவாக்கிய 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்கிற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் அடிப்படையில் 2000-இல் அதே பெயரில், 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்கிற திரைப்படத் தொடர் துவங்கியது. ஆக்ஷனும் நகைச்சுவையும் கலந்த அத்திரைப்படத்தின் திரைக்கதையமைப்பு, தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருந்தது.
சார்லஸ் டவுன்சீட் என்கிற முகம் தெரியாத ஒரு நபர், தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்யும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் பிரதானமாகப் பணிபுரிபவர்கள், தேவதைகள் போன்ற மூன்று பெண்கள். புலனாய்வுத் திறனிலும், ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுவதிலும்வல்லவர்கள். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு, 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ராட்டல் (Charlie's Angels: Full Throttle)' படமும் வெளியாகி வெற்றியும் பெற்றது.
தற்போது, நீண்ட இடைவெளிக்குப் ப...