Tag: KSK Selva

கண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்கக் காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை 'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி. மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்கப் பயணித்துள்ளன .
படம் பற்றி இயக்குநர் பேசும்போது, "அழிந்து வரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றிப் படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க ந...

வசீகர வெண்பா
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்கக் கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப் பெயருடன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா.
சமீபத்தில் வெளியான காதல் கசக்குதையா படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்தக் கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையைப் படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கிச் சுமந்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு!
அந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்யத் தயாராகி விட்டார். ஆம், இசையம...

“சென்ஸார் மறுக்கும் மர்மமென்ன?” – இயக்குநர் ராகேஷ்
எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' படத்திற்குச் சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் 'திலகர்' படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா; இன்னொருவர் அஞ்சனா.
இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்'கோபி, ‘சதுரங்க வேட்டை' புகழ் வளவன், 'நான் மகான் அல்ல' ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 1 அன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்யப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது, “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன, இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோதச் சம்பவங்கள் நி...

மன்னர் வகையறா – ஸ்டில்ஸ்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா
‘கன்னா பின்னா’ படத்தின் இயக்குநர் தியா, ‘நாளைய இயக்குனர்’ குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், திருமணம் செய்துகொள்வேன் என அழகான பெண்களைத் தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.
இதை அக்மார்க் காமெடிப் படத்தை இயக்கியுள்ள தியா தனது படத்திற்கு உரிய சென்சார் சான்றிதழ் பெறப் போராடி வருகிறார்.
“ஜனரஞ்சகமான காமெடிப் படத்தையே நான் இயக்கியுள்ளேன். அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான். ஆனால் தணிக்கை அதிகாரியான மதியழகன், இந்தப் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தருவேன் எனக் கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்கவைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசுகிறார்.
தணிக்கை என்கிற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சினிமாவை அழிக்க வ...

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்
உச்ச நடிகரான பவர் ஸ்டாருக்கு, மதுரையில் அதி தீவிர ரசிகர்களாக சிம்மக்கல் சேகர், கோரிபாளையம் ரஹமத், பழங்காநத்தம் பாபு ஆகியோர் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி, ‘பாகுபலியும் பாயும்புலியும்’ என்ற பவர் ஸ்டாரின் படத்தை மதுரை ஏரியா வினியோகத்திற்கு எடுத்து ஓட்டாண்டி ஆகுகின்றனர். தன் உயிரினும் மேலான தலைவனைப் போய்ப் பார்க்கின்றனர். தலைவரோ உதாசீனப்படுத்தி விட, அவமானப்படுத்தப்படும் மூன்று ரசிகர்களின் எதிர்வினை தான் படத்தின் கதை.
‘பாட்ஷா’ பட ரஜினி பாணியில் அறிமுகமாகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். பின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரையும் ‘ஸ்பூஃப்’ செய்யும் காட்சிகள் வருகிறது. தொடக்கத்தில் இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் அதன் பின் தடுமாறத் தொடங்கி, அதையே கடைசி வரை செய்கிறது. ‘ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க..’ என நீளமான பெயர் தாங்கிய மருத்துவராக மன்சூர் அலி கான் ...







