Shadow

Tag: Kuttram 23 vimarsanam

குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயைந்...