
லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review
இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் சாப்பிடுகின்றனர். பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். உயிர் போகும் அப்பிரச்சனையிலிருந்து எப்படி அந்த நால்வரும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
மிமிக்ரி கோபியாக ரமேஷ் திலக், திடீர் திருப்பதியாகக் கருணாகரன், குயில் குமாராக C. மணிகண்டன், பேய் முருகேசனாக ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோ சினிமாஸ் C. மணிகண்டன் தயாரித்த...